முத்து நகரில் மக்கள் போராட்டம்- நீதிமன்றத்தால் தடை உத்தரவு!

You are currently viewing முத்து நகரில் மக்கள் போராட்டம்- நீதிமன்றத்தால் தடை உத்தரவு!

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறை முக அதிகார சபையினர் குத்தகைக்கோ அபகரிப்பு செய்யவோ விட கூடாது என மக்கள் கவனயீர்ப்பில் இன்று  ஈடுபட்டனர்.

இந்தியாவிற்கு காணிகளை விற்காதே எங்கள் நிலம் எங்களுக்கு போன்ற வாசகங்களை ஏந்தி முத்து நகரில் குறித்த பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கப்பல் துறை , முத்து நகர் போன்ற பகுதியில் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இக் காணிகள்  சிறீலங்கா துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என அதனை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இருந்த போதிலும் குறித்த பகுதிக்குள் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என திருகோணமலை நீதிமன்ற நீதவானால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என சீனக்குடா பொலிஸார் நால்வர் அடங்கிய பெயரை குறித்து தடை உத்தரவை வழங்கியுள்ளதாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தெரிவித்தார்.

குறித்த முத்து நகர் மற்றும் கப்பல் துறை பகுதிகளில் மக்கள் 1972ம் ஆண்டு பிரதமராக செயற்பட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தது. விவசாயத்தை நம்பி வாழும் மக்களை தற்போது மீள் எழுப்பி இந்தியாவுக்கு மின்சார காற்றாலை உற்பத்திக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவது மக்களை நசுக்கும் செயலாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply