தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரை மற்றும் கொள்கைகளை மூடி மறைத்த யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்டு இயங்கும் பத்திரிகைகள் தற்போது மக்கள் ஆணையேற்று பாராளுமன்ற அமர்வில் பேசியதை முதன்மை செய்தியாக வெளியிடும் ஊடக தர்ம நிலையினை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்குள் பிழவினை ஏற்படுத்தி அதில் இருந்து பலரை பரித்தெடுத்து முன்னணியின் பலத்தினை இழக்கசெய்யும் நடவடிக்கையில் இணையத்தளஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் சில அண்மைக்காலத்தில் செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஊடகங்கள் தேர்தல் கால பரப்புரையின் போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பரப்புரை கூட்டங்களை முதன்மைப்படுத்தாமல் செய்தி வெளியிட்டுள்ளமையினை காணக்கூடியதாக இருந்துள்ள நிலையில் மக்கள் அங்கிகாரத்துடன் பாராளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை முதன்மைப்படுத்தி வெளியிடுகின்றார்கள்.
இவ்வாறுதான் வடக்கில் குறிப்பாக யாழப்பாணத்தினை தளமாக கொண்டு செயற்படும் அச்சு மற்றும் இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.