கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி
யில் “ஏ – 9 வைன் ஸ்ரோர்” எனும் மதுபானச்சாலை உரிமம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்
னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி
செய்யப்பட்டுள்ளது.
சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபான சாலைக்கான அனுமதி அப்போதைய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
தனுசா நடராசா என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்காக விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.
இத் தனுசா சுன்னாகத்தை பூர்வீகமாக கொண்டவர்.இத்தனுசாவின் தந்தை நடராசா பூபாலகிருஸ்ணா ஆச்சிரமம் என்றும் பெயரில் சுன்னாகத்தில் பிறேமானந்தாவின் ஆச்சிரமத்தை நடத்திவந்தவர் அந்தவகையில் பிரேமானந்தாவின் பக்தனான சி வி விக்கினேஸ்வரனுக்கும் தனுசாவின் தந்தைக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவி வந்தது.
தனுசா முதலில் ஓர் இரணுவத்தில் பணியாற்றிய இராணுவ சிப்பாயை திருமணம் செய்தன் பயனாக இவருக்கு பெண்பிள்ளை உண்டு பின்னார் இராணுவ சிப்பாயை விவாகரத்து செய்துவிட்டு பெருபான்மை இனத்தை சேர்ந்தவரை மறுமணம் முடித்தவர் பின்னர் அவரையும் கைவிட்டு விட்டு தற்பொழுது சமத்துவ கட்சியின் தலைவரும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமாருடன் வாழ்ந்து வருகின்றார்
தனுசாவிற்கு சொந்தாமான மதுபான சாலைகள் பின்வருமாறு
1>சுன்னாகம் சந்தியில் உள்ள நடராசா மதுபானசாலை
2>இணுவில் தியேட்டர் வீதியில் உள்ள சுப்பையா மதுபான சாலை
3>கனகபுரம் தனு மதுபான சாலை
“அந்த மதுபானசாலை அனுமதியை தாய் தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக்கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை.” விக்கினேஸ்வரன் கூறுவது நகைப்புக்குரிய விடயம்
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் 172 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.