தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில், பரீட்சைக்குத் தோற்றியவர், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
2020 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து நான்கு கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் சிறையிலிருக்கும் கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான
சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்கில் தொழில் பயிற்சி, மத, கல்வி, சமூக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களை சமூகமயப்படுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.