முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா நேற்று காலமானார்.
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.