முல்லைத்தீவு – வெலிஓயா சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஹடுகஸ்வெவ பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் நேற்றையதினம் (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் ஹடுகஸ்வெவ பிரதேசத்தின் கெப்பற்றிகொல்லாவ எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் T 56 துப்பாக்கி அதன் 08 தோட்டாக்கள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி அதன் 05 தோட்டாக்கள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 41, 39 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.