முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றம் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்த செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்க செந்தமான காணிகளை அபகரித்து வீதிகளின் அகலத்தினை அதிகரிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டுள்ளதால் மக்களின் அதிகளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச சபைகளிடம் அனுமதி எடுத்து கடைகள்,வீடுகள்,மதில்கள் மக்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் நில அளவத்திணைக்களத்தினர் தற்பொது மீண்டும் எல்லைப்படுத்தி காணிகளை அபகரித்து வருகின்றார்கள்.
உள்ளுராட்சி மன்றங்களின் சட்டத்தின் படி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முதன்மை ஏ-தர வீதிகளின் அகலங்கள் 33 அடி என்பது வரையறை இன்னிலையில் நிலஅளவைத்திணைக்களத்தினர் 66 அடியினை அளவீடாக கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முதன்மை விதியில் இருந்து பிரிந்து செல்லும் வீதிகள் 24 அடியாக பிரதேச சபையினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நில அளவைத்திணைக்களத்தினால் 33 அடியாக எல்லைப்படுத்தி தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு,கோம்பாவில்,ஒதியமலை,மேழிவனம் ஆகிய கிராமங்கள் நில அளவைத்திணைக்களத்தினரால் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் புதிதாக பொறுப்பாக வந்த சிரோஸ்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரியால்தான் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளார்.
தேச வளமைச்சட்டத்திற்கமைய பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள வீதிகளின் எல்லைகளுக்கு முரணாக நில அளவைத்திணைக்களத்தினர் எல்லைபோடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நகரப்பகுதியில் உள்ள பத்து பேர்ச் காணியில் நிலையான கட்டிடங்கள் அமைக்கமுடியாது என்றும் நில அளவைத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.