முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
வங்காள விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகப்படியாக 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.