முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக சோழபயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது சோழ செய்கைக்கு படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாய போதனாசிரியர்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவ மாவட்டத்தில் சோழ பயிர்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சோழப்பயிர்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை,புதுக்குடியிருப்பு,விசுவமடு,மாங்குளம்,ஒலுமடு,மதவாளசிங்கன் குளம்போன்ற பிரதேசங்களில் சோழசெய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் படைப்புழுவின் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
விவசாய திணைக்களம் படைப்புழுவின் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள்.
விவசாய போதனாசிரியர்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் களத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றார்கள் கட்டுபாட்டு முறைகள் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றுது.
விவசாய போதனாசிரியர்கள் ஊடாக சிபார்சு செய்யப்பட்ட கிருமிநாசினிகளை ஒரே நேரத்தில் பாவிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கருக்கு மேல் படைப்புழுவின் தாக்கம் காணப்பட்டுள்ளது. இதன்போது அழிவு மதிப்பீடு செய்யப்பட்டு 24 ஏக்கருக்கு பயிர் காப்புறுதி சபையின் ஊடாக விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 93 ஏக்கரில் விவசாயிகள் சோழபயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
சோழப்பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகவும்அவதானமாக பயிர்களை அவதானித்து கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி விவசாய போதானாசரியர்களின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளுமாறு பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்துள்ளார்.