முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு !

You are currently viewing முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு !

யாழ்ப்பாணத்திலிருந்து(Jaffna) முல்லைத்தீவு(Mullaitivu) நோக்கிச் பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரச பேருந்தின் சாரதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, காயமடைந்த பேருந்தின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply