முல்லைத்தீவு வட்டுவாகல் விபத்தில் பாடசாலை ஆசிரியர் மரணம்!

You are currently viewing முல்லைத்தீவு வட்டுவாகல் விபத்தில் பாடசாலை ஆசிரியர் மரணம்!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் 20.03.2022 அன்று தனியார் பேருந்து தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்து உள்ளார்கள்,

20.03.2022 நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுவாகல் பகுதியில் இரு பேருந்துக்களும் போட்டிக்க ஓடிக்கொண்டு செல்லும் போது வீதியினை அழகிய மயில் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது,

இதனை அவதானித்த அரச பேருந்து வேகத்தினை குறைத்துக்கொள்ள பின்னால் சென்ற தனியார் பேருந்து வேகத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரச பேருந்திலை விலைத்தி செல்ல முற்பட்ட போது வீதியின் குறுக்கே சென்ற மயிலையும் மோதித்தள்ளிவிட்டு வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது.

இதன் போது பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 33 அகவையுடைய ஜெயபுரம், கிளிநொச்சியினை சேர்ந்த யூட்நிசான் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்த நிலையில் மக்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்,

உயிரிழந்த இளைஞன் கிளி/ செல்வாநகர் அ.த.க. பாடசாலை கணிதபாட ஆசிரியர் ஆவார், இத்துயரமான சம்பவமானது கிளி ஜெயபுரம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் அதிதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 61 அகவையுடைய வயோதிபர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்,

ஆரச தனியார் பேருந்துக்கள் ஏட்டிக்கு போட்டிக்கு ஓடுவதாலேயே இவ்வறான விபத்துக்கள் இடம்பெறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று நடைபெற்ற விபத்து குறித்து  சிங்கள காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply