முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்இச்சம்பவம் 19.11.20 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.
32 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொலையுடன் தொடர்புடைய குடும்ப பெண் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள் காணப்படுவதால் பிரரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
முள்ளியவளை முறிப்பில் குடும் பெண்ணின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி!
