முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்!

You are currently viewing முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்!

சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த அஞ்சலி நிகழ்வு, இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றுள்ளது.

அக்னெஸ் கலமார்ட் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனபதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம்.

அதற்குரிய விசாரணைகளை நடாத்துவதற்கான படிநிலைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments