முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான இன்று 11ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றுவருகின்றன.
இறுதியுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து,
அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் பிரகடன உரை வாசிக்கப்பட்டது.
பத்துக்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவச்சோதனைச்சாவடிகளின் கடும் சோதனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதார ரீதியிலான சமூக இடைவெளிகளை ப்பின்பற்றி முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையில் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக வலிகளும் காயங்களும் நிறைந்த வரலாற்றுப்புனிதமண்ணில் நினைவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















