முள்ளிவாய்க்காலில் உணர்வெழுச்சியுடன் மீண்டெழும் தமிழர் தேசம்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீருடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள் பேரினவாத சிறீலங்கா ஆயுதப் படைகளால் இனவழிப்பு செய்யப்பட்டனர்.



















