முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் Aarhus நகரில் கவனயீர்ப்பு!
வியாழக்கிழமை 12/05/2022 அன்று ஓகுஸ் நகரில், ஓகுஸ் தமிழர்களும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பை இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. அங்கு எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாகைகள், விபரணப் படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பங்கு கொண்ட மக்களால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கான வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை அன்று ஹேர்னிங் நகரிலும் அதைத் தொடர்ந்து டென்மார்க் தலைநகரில் 16-17.5.2022 தினங்களில் கவனயீர்ப்பு நிகழ்வும்,18.05 2022 அன்று ஏழுச்சிப் பேரணியும் நடைபெறவுள்ளது.





