முழுப்பூசணிக்காயை தொண்டையில் சிக்கவிட்டு தவித்த ரணில் விக்ரசிங்க!!

You are currently viewing முழுப்பூசணிக்காயை தொண்டையில் சிக்கவிட்டு தவித்த ரணில் விக்ரசிங்க!!

அல்ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வழங்க நீண்ட நேர்காணல் தொடர்பில் சர்வதேச ரீதியில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் பெரும்பகுதி மறைக்கப்பட்டு வெளியிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றிருந்த போது பதிவு செய்யப்பட்ட நேர்காணல் நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்த போது சூடான நிலை ஏற்பட்டது.

இதேவேளை இதனை திட்டமிட்ட ஊடகத்தாக்குதல் என ஒட்டுண்ணி ஒன்று உளறியுள்ளது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்ற சர்வதேச ஊடக நேர்காணலானது, பத்திரிகை வேடமிட்டு நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆனால் நடந்தது என்ன?

மஹ்தி கேட்ட கேள்விகள் எல்லாமே யாருக்குமே புதிசு அல்ல.’இரவைக்கு நெட்பிளிக்ஸ் பார்த்தபிறகா இடியாப்பமும் பால்சொதியும் சாப்பிடுகிறீர்கள் அல்லது அதற்கு முன்பா’ என்று பவ்யமாய்க் கேட்கும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிற்கு இதெல்லாம் வியப்பை ஏற்படுத்தலாம்.ஆனால் இலங்கையின் அரசியல் சரித்திரம் தெரிந்த யாருக்குமே மிகச் சாதாரண கேள்விகள்.
ராஜபக்சேவை பிரசித்தமாய் எதிர்ப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ரணில்- ராஜ்பக்சே என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள். நீங்கள் அவரைப் பாதுகாப்பதால் அப்படி ஒரு பெயர் வந்ததா?
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தப் பணம் இல்லை என்று காரணம் கூறினீர்கள்.எலிசபத் மகாராணியினதும் ஜப்பான் பிரதமரதும் மரண வீடுகளுக்குப் போவதற்கு எல்லாம் பணம் இருந்ததா
என்று அனல் தெறிக்கும் கேள்விகள்.ஒரு கட்டத்தில் நீ பிறக்க முன்பே நான் அரசியலில் இருக்கிறேன் என்று சொல்வார் ரணில் பரிதாபமாய்..
மஹ்தி விடுவதாய் இல்லை.
பதினாறு வருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படுகொலைகளுக்கு நீதி ஏன் கிட்டவில்லை என்று கேட்கும் போது ‘I am not saying anything I said no contest . so bring next question.’ என்று முணங்கும் போது ஆறாம் வாய்ப்பாடு தெரியாத மாணவன் ஒருவன் போல இருந்தது. தமிழ்ப் படுகொலைகளுக்குப் பொறுப்புடன் பதில் கொடுக்க எந்த அரசியல்வாதியுமே லாயக்கில்லாத போது இனமுரண்பாட்டின் ஆணிவேரான ஐக்கிய தேசியக் கட்சியின் பலமிகு அமைச்சராகவும், ஆறு முறை பிரதமர்,ஜனாதிபதிப் பதவியை அலங்கரித்தவருமான இவர் முழுப்பூசணிக்காயை தொண்டையில் சிக்கவிட்டு தவித்தது போன்று உணரமுடிந்தது.
அதைவிட நகைச்சுவை என்னவென்றால் ரணில் சார்பாய்ப் பேச என்.ஜே தேவா என்ற ஒரு தூதுவர் பொறுமையிழந்து ,’இதெல்லாம் ராஜபக்சேக்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்.இவரது அரசியலை ராஜபக்சேக்கள் நாசம் செய்துவிட்டார்கள் என்று அடித்துவிட உடனே மஹ்தி,’ அப்படி என்றால் இவர் ஏன் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்சேவின் பிறந்த நாள் விழாவில் கேக் எல்லாம் வெட்டிப் பாட்டுப் பாடினார்’ என்று கேட்க மண்டபம் முழுக்க வெடித்தது சிரிப்பு.
உண்மைகள் ஒருபோதும் உறங்காது என்பதற்கு அல்யசீராவின் ஊடகப்பணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply