மூன்றாம் உலகப் போரை தூண்டும் மேற்கத்திய நாடுகள்!

You are currently viewing மூன்றாம் உலகப் போரை தூண்டும் மேற்கத்திய நாடுகள்!

 

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக  தொலைகாட்சி நேர்காணல் ஒன்றின் போதே  பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவானது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிப்பதாகவும்,  ரஷ்யா மற்றும்  உக்ரைன் ஆகிய இரு நாடுகளையும் நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ரஷ்ய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,லுகாஸ்ஷென்கோவின் கருத்துகளை ரஷ்யா கவனித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தப்போவதாகவும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின்  குறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply