மூன்றாவது போர்நிறுத்ததை அறிவித்தது ரஷ்யா!

You are currently viewing மூன்றாவது போர்நிறுத்ததை அறிவித்தது ரஷ்யா!

மாஸ்கோ பல உக்ரேனிய நகரங்களில் இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீண்டும் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான Interfax தெரிவித்துள்ளது. உக்ரைனில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு பொதுமக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாக மனிதாபிமான வழித்தடங்கள் அமைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும் என்று கூறப்பட்டது.

ஆனால், ரஷ்ய துருப்புக்கள் போர் நிறுத்த விதிகளை கடைபிடிக்காமல், தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டபோது. மேலும், மக்கள் வெளியேற்றம் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாஸ்கோ நேரப்படி இன்று (செவ்வாக்கிழமை) காலை 10 மணி முதல் புதிய போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply