மேதகுவின் சிந்தனையேவழிநடாத்தும்,புதியசிந்தனையென்னும்பெயரில் சங்குஊதவந்தால் அவர்களிற்கும் சங்குதான்

You are currently viewing மேதகுவின் சிந்தனையேவழிநடாத்தும்,புதியசிந்தனையென்னும்பெயரில் சங்குஊதவந்தால் அவர்களிற்கும் சங்குதான்

தென்கிழக்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு தமிழீழம் ஆகும். இந்நாட்டின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை அவர் வகுத்த சட்டதிட்டங்கள் தான் சிறிலங்காவின் கொழும்புவரை ஆதிக்கச் செல்வாக்குச் செலுத்துகின்றது.

ஒவ்வொரு மாவீரர்நாள் உரையிலும் அவர் சிங்கள மக்களிற்கும் செய்திகள் சொல்லத் தவறியதில்லை. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போர் நீண்டுகொண்டு செல்கிறது. இந்த நிலை தொடருமானால் சிறிலங்கா தேசம் பொருண்மியம் குன்றி அதளபாதாளத்திற்குச் சென்றுவிடும், ஒவ்வொரு பொதுமகனின் தலையிலும் கடன்சுமை ஏறும், நாடு பொருண்மிய அழிவைச் சந்திக்கும் என  மாவீரர்நாள் உரைகளில் தெளிவாகக் கூறியிருந்தார்.

பல தடவை தேர்தல்களில் சிறிலங்காவிலும் கிங்மேக்கராக இருந்தார். 2009 மே 18 ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின்னரும் கூட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் சிந்தனைதான் கிங்மேக்கர், இதைப் புரிந்துகொள்ள விண்வெளிவிஞ்ஞானம் ஒன்றும் தேவையில்லை.

தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வழி வரைபடத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் எல்லாம் விளங்கிவிடும். “ஈஸ்டர் தாக்குதல்” மூலம் கோத்தபாயவை சனாதிபதியாக்கிய பிராந்திய மேற்குலக சக்திகள்தான் காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் மூலம் கோத்தாவை அப்புறப்படுத்தினர்.

மக்களாதரவற்ற ரணில் விக்கிரமசிங்கவை சனாதிபதியாக்கினர். ரணிலை தக்கவைப்பதற்காக பிராந்திய வல்லரசும் மேற்குலகும் இணைந்து பல திரைமறைவு ஒப்பிரேசன்களை நடத்தினர்.

அதில் ஒன்றுதான் ஒப்பிரேசன் சங்கு எனவே,தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ரணிலுக்கு வடகிழக்கில் வாக்குகள் அதிகளவில் கிடைக்காது .தமிழர்களின் வாக்குகளை அனுரவுக்கோ சஜித்துக்கோ போகவிடாமல் தடுப்பதன் ஊடாக ரணிலை வெல்ல வைக்கலாம் எனக் கணிப்பிட்டு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினர்.

ஆனால் நடந்தது என்ன? தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைத்து அழிக்க பலசூழ்ச்சிகளைச் செய்த ரணில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.  வாக்காளர்கள் பிராந்திய வல்லரசுக்கும், மேற்குலகுக்கும் சேர்த்து சங்கு ஊதிவிட்டனர். மேற்குலகமும்   பிராந்திய வல்லரசும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்வது நல்லது. தென்கிழக்காசியாவில் தமிழீழம் என்னும் தேசம் மேதகு பிரபாகரன் சிந்தனையை உள்வாங்கியுள்ளது.

தமிழர்களின் அரசியல் நகர்வு என்பது அதன் அடியொற்றியே இருக்கும். தமிழீழம் எவருக்கும் பகைமையான தேசம் அல்ல. ஆனால்,யாராவது வலிந்து பகைமை கொண்டால் வேறு தெரிவுகளின்றி பதம் பார்க்கும். தமிழினத்திற்கு சங்கு ஊத வந்ததன் ஊடாக களத்திலும் புலத்திலும் பல களைகள் தம்மை வெளிக்காட்டிவிட்டன. இ

இதுதான் சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மரபுவழி வந்த ஒரு கோட்பாட்டுச் சித்தாந்தப் பாதுகாப்பு முறைதான் களையெடுப்பு ஆகும் எனவே தமிழரின் வரலாறு காலத்திற்கு காலம் தனது தமிழீழம் என்னும் கோட்பாட்டை அழியவிடாமல் பாதுகாக்க களையெடுப்புகளைச் செய்வது வழமை தானே. வரலாறுதானே எமது வழிகாட்டி தொடர்ந்தும் தமிழினத்தை மேதகு வின் சிந்தனையே வழிநடாத்தும். இதனை மறுதலித்து புதிய சிந்தனையென்னும் பெயரில் யாரும் சங்கு ஊத வந்தால் அவர்களிற்கும் சங்குதான்.

-அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

பகிர்ந்துகொள்ள

Leave a Reply