தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு)தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் BS value என்கின்ற இணையவெளி திரையில் (OTT) இன்று(25.05.2021) வெளியாகியுள்ளது அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் மேதகு” திரைப்படத்திற்கு, வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்துள்ளனர்
தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும் ‘மேதகு’ போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.


