மேற்குலகத்தின் பரிசோதனைக்கூடமல்ல ஆபிரிக்கா! குமுறும் ஆப்பிரிக்க பிரமுகர்கள்!!

You are currently viewing மேற்குலகத்தின் பரிசோதனைக்கூடமல்ல ஆபிரிக்கா! குமுறும் ஆப்பிரிக்க பிரமுகர்கள்!!

“கொரோனா” வைரசுக்கானா மருந்துகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் ஆப்பிரிக்காவிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருப்பது, ஆபிரிக்க பிரமுகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரான்சை சேர்ந்த இரு வைத்திய நிபுணர்களான “Jean-Paul Mira” மற்றும் “Camille Locht” ஆகியோர், “கொரோனா” வுக்கெதிரான மருந்தொன்றை கண்டறிவதில் காத்திரமான பங்கை வகிக்கக்கூடிய சோதனைகளை ஆப்பிரிக்காவில் நடத்தவேண்டுமென்ற பொருள்பட கருத்துரைத்ததாகவும், அதனையிட்டு தாம் கடும் ஆத்திரமடைந்திருப்பதாகவும் ஆபிரிக்கபின் பிரபல உதைபந்தாட்ட வீரர்களான, “Chelsea” விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர்களான “Didier Drogba”, “Samuel Eto’o” மற்றும் “Demba Ba raser” ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேற்குலக நாடுகள், ஆப்பிரிக்காவை எப்போதுமே ஒரு பரிசோதனைக்கூடமாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள மேற்படி விளையாட்டு வீரர்கள், “கொரோனா” பரிசோதனைகளை ஆப்பிரிக்காவில் நடத்தவேண்டும் என்ற பிரான்ஸ் நிபுணர்களின் கருத்தானது இனவாத / நிறவாத உள்நோக்கத்தை கொண்டதெனவும் சாடியுள்ளனர்.

போதுமான வைத்திய வசதிகளோ, அல்லது வைத்திய உபகாரணங்களோ இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே இருக்கும் ஆப்பிரிக்காவில் சோதனைகளை நடத்துவது என்ற மேற்படி பிரான்ஸ் நிபுணர்களின் கருத்தானது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாததென தெரிவித்திருக்கும் மேற்படி விளையாட்டு வீரர்களில் குறிப்பாக, “Senegal / செனெகல்” நாட்டை சேர்ந்த “Demba Ba” தெரிவிக்கையில், ஆப்பிரிக்காவானது மேற்குலகத்தின் பரிசோதனைக்கூடமல்ல எனவும், மேற்படி பிரான்ஸ் நிபுணர்களின் கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இனவாத / நிறவாத உ ட்கருத்துக்களை கொண்ட உரையாடல்களை தவிர்த்துவிட்டு, ஆப்பிரிக்காவில் “கொரோனா” பரவுவதை தடுப்பதற்கான உதவிகளை மேற்குலகம் வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகத்தின் பரிசோதனைக்கூடமல்ல ஆபிரிக்கா! குமுறும் ஆப்பிரிக்க பிரமுகர்கள்!! 1

“Kamerun / கமெரூன்” நாட்டை சேர்ந்த ” Samuel Eto’o” தெரிவிக்கையில், ஆப்பிரிக்கா மேற்குலகத்தின் விளையாட்டுத்திடலல்ல என தெரிவித்துள்ளதோடு, மேற்படி நிபுணர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள