“நல்ல ஆலோசனை” என்ற பெயரில், வலுவான நோயெதிர்ப்பை வழங்கும் அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் மருந்துகள் பற்றி இணையத்தில் ஏராளமாக விளம்பரங்கள் பரவி வருவதை எதிர்த்து உணவு மேற்பார்வை ஆணையம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
“நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உங்கள் உடலில் ஒரு நல் நோயெதிர்ப்பு சக்தி அவசியமானது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடிய சூப்பர் உணவுகள் அல்லது மாத்திரைகள் எதுவும் இல்லை” என்று உணவு மேற்பார்வை ஆணையத்தின் இயக்குநர் Karina Kaupang கூறியுள்ளார்.
கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளில், தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் மிகவும் கவனமாக இருக்கும்படி உணவு பாதுகாப்பு ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது:
- கொரோனா தொற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை/- எண்ணத்தை நீங்கள் பெறும் வகையில் விற்பனைச் சந்தையில் கூற்று அல்லது படங்களைப் பயன்படுத்துவது.
- கொரோனா தொற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்தமுடியும் என்று, தங்களைத் தாங்களாகவே மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள், வல்லுநர்கள் என்று கூறுவோர் அல்லது பிற அதிகாரப்பூர்வமற்ற தளங்கள்.
- உத்தியோகபூர்வ உள்நாட்டு சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட, அதிகாரிகள், வல்லுநர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர், மற்றும் சுலோகங்கள் மூலம், உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கான எந்த இணைப்பையும், குறிப்புகளையும் வழங்காமல், தம்மை அங்கீகரிக்கப்பட்டதாக கூறும் நிறுவனங்கள்.
- “இன்று மட்டுமே கிடைக்கின்றது,” “விரைவாக விற்கப்படுகின்றது” அல்லது இது போன்ற கூற்றுக்களைப் பயன்படுத்துவது.
- கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என்று கூறி, ஒத்த தயாரிப்புகளின் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது.
மேலதிக தகவல்: VG