உக்ரைன் மீது ரஷியா 131-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா நேற்று அறிவித்தது. இதன் மூலம் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.