மேலும் 2 நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா: வெளியான காரணம்!

You are currently viewing மேலும் 2 நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா: வெளியான காரணம்!

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைனும் போரை எதிர்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கை என்று கூறி ரஷியா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 51வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பு வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனியர்களில் பலர் போரில் ஈடுபட்டும், ஏவுகணை வீச்சிலும் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் கூடுதல் ஆயுதங்களை வழங்க உக்ரைன் கேட்டு கொண்டுள்ளது.

இந்த சூழலில் நேட்டோ அமைப்பில், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் விடுத்துள்ள எச்சரிக்கையில், இதனால், ரஷியாவின் மேற்கு பகுதியில் தரை மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகள் கூடுதலாக குவிக்கப்படும்.

பால்டிக் பகுதியில் அணு ஆயுத பயன்பாடற்ற சூழலை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியமற்ற நிலை ஏற்படும். எனவே, சமநிலை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஷியாவில் அதிபர் புதினின் இரு தசாப்த பதவி காலத்தில், கடந்த 2008 முதல் 2012 வரை இடைக்கால அதிபராக பதவி வகித்தவர் மெட்வடேவ். அவர், முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அதிகாரம் பெற்ற நபர் இல்லை என்றபோதிலும், அவ்வப்போது ஆக்ரோசமுடன் பேசி வருகிறார்.

போலந்து மற்றும் பால்டிக் பகுதிகளுக்கு இடையே கலினின்கிராட் பகுதியில் நவீன அணு ஆயுத கிடங்கு ஒன்றை ரஷியா அமைத்திருக்க கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கடந்த 2018ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply