ஊரடங்கு நீடிப்பால் குடும்ப அட்டை வைத்திப்பவர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 30ந் திகதி வரை ஊரடங்கு நீடிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் திகதி வரை அமுலில் இருக்கும். ஊரடங்கு நீட்டிப்பால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும்.
காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வெதுப்பகங்கள் செயல்படலாம், பொதி முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும்.
பிறமாநில தொழிலாளர்களுக்கு 15கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது அது மீளப்பெறப்படவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.