தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது வீடுகளில், மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி உணர்வுபூர்வமான அனுட்டிக்கவேண்டும் என யாழ் பல்கலைக் கழக மாணர் ஒன்றிய கோரிக்கை விடுத்துள்ளதுது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளாலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல் மே-18ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில், சமகால சூழலில் பெருமளவு மக்களை முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூட்ட முடியாதுள்ளது.
எனவே அன்றைய நாளில் மக்கள் தமது வீடுகளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி உணர்வுபூர்வமாக அனுட்டிக்கவேண்டும்.
தமிழ் இனம் கருவறுக்கப்பட்ட நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகும். அன்றைய நாளில் படுகொலை செய்யப் பட்ட எமது மக்களுக்காக ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், தாம் தங்கியிருக்கும் இடங்களிலும், வர்த்தக நிலையங்கள் பொது இடங்களிலும் எமது மக்களுக்காக தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துவதுடன்,
அன்றைய நாளில் உப்பும் அரிசியும், தண்ணீரும் கலந்த கஞ்சியை பருகி எமது மக்களுக்கு உணர்வுபூரமாக அஞ்சலிகளை செய்யவேண்டும். எனவும் எமது இனம் அன்றைய நாளில் பட்ட துன்பங்களை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்றனர்.