மே-18 நினைவேந்தல் நாளை ஒட்டி சிவப்பு -மஞ்சள் விளக்குகளால் ஒளிா்ந்த கனடா- பிறம்டன் நகர மண்டபம்!

You are currently viewing மே-18 நினைவேந்தல் நாளை ஒட்டி சிவப்பு -மஞ்சள் விளக்குகளால் ஒளிா்ந்த கனடா- பிறம்டன் நகர மண்டபம்!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் பிரம்டன் நகர மண்டபம் சிவப்பு, மஞ்சள் விளக்குகளால் நேற்றிரவு ஒளிர்ந்தது.

இந்தச் செயற்பாடு மூலம் தமிழ் மக்களுடன் இணைந்து அவா்களின் துயரங்களில் பங்கெடுத்ததற்காக பிரம்ரன் நகர சபைக்கு கனேடிய தமிழ் இளைஞர் பேரவை கனேடிய தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளது. இதேவேளை, தமிழ் இனப் படுகொலையை நினைவு கூர்ந்து பிரம்டன் நகர மண்டபத்தில் சிவப்பு, மஞ்சள்கள் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டதாக கூறியுள்ள பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண், பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம் என தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தோர், இடம்பெயர்ந்தோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூருவதாக பிரம்டன் நகர சபை உறுப்பினர் மார்ட்டின் மெடிரோஸ் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரம்டனில் தமிழினப் படுகொலை நினைவுவாலயம் ஒன்றை அமைப்பதற்கான தீா்மானத்தை நிறைவேற்றுவதில் தமிழ் சமூகத்துடன் இணைந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பங்கெடுத்தமை குறித்து பெருமிதம் அடைகிறேன் எனவும் மார்ட்டின் மெடிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply