முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட தமிழின அழிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் – நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி தாயகத்திலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை,பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும்.
இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன்.
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மாக்னி;ட்ஸ்கி பாணி தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன்.
அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை.
15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்.
சிங்கள அரசின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம்.
ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன்.
மாவீரர் தினத்தன்று வெளிவிவகார குழுவின் அமர்வில் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசென்றேன்.நீதி உண்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நான் உறுதியாக நம்புவதனால் நான் இதனை செய்தேன்.
இவை அருவமான கொள்கைகள் இல்லை,தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை இவை ஆழமானவை தனிப்பட்டவை.
தமிழினஅழிப்பை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்,மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள்,’பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டவைகள் . காணமல்போன ஆயிரக்கணக்கானோர்.
மனித குலத்தின் மிகமோசமானவற்றை எதிர்கொண்டு தப்பிய தலைமுறை இன்னமும் சுமக்கும் அதிர்ச்சிகள் காயங்கள்.
நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் – நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது.
பிரிட்டனில் நான், ஆயிரம்நாட்களிற்கு மேல் டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த தமிழர்கள் உட்பட தமிழ் அகதிகளிற்காக குரல்கொடுத்துள்ளேன். முன்னைய கென்சவேர்ட்டிவ் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் முட்டுக்கட்டை நிலையில் விடப்பட்டனர்.
ஆனால் தொடர்ச்சியான பரப்புரைகளின் பின்னர் அவர்களிற்கு பிரிட்டனில் பாதுகாப்பான புகலிடம்வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரவித்துள்ளார்.