மொசாம்பிக் சிறைச்சாலையில் அமைதியின்மையால் 33 பேர் உயிரிழப்பு !

You are currently viewing மொசாம்பிக் சிறைச்சாலையில் அமைதியின்மையால் 33 பேர் உயிரிழப்பு !

மொசாம்பிக் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச்சென்றவர்களில் 150 பேர் மீளக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினத்தில் மொசம்பிக்கின் 2 சிறைகளில் சிறை உடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply