ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை மேயர்களின் வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு , தீவைத்து எரி்க்கப்படுகின்றன.
இந்திக அனுருத்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, சனத் நிசாந்த ஆகியோரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் அலுவலகம், தீவைத்து எரிக்கப்பட்டதுடன், அங்கிருந்த வாகனங்களும் முற்றாக எரிந்து போயின
மொறட்டுவ, குருநாகல உள்ளிட்ட பல மாநகர சபை மேயர்களின் வீடுகளும், தீக்கிரையாக்கப்பட்டள்ளன.
அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் வாகனங்கள், வீடுகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளும் அடித்து நொறுக்கப்படுவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
.jpg)
.jpg)