மோசமான நிலையில் ரஷ்யா! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing மோசமான நிலையில் ரஷ்யா! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரஸ் தொடர்பில் மிக மோசமான நிலையை நோக்கி ரஷ்யா சென்றுகொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர், “Viladimir Puthin / விளாடிமிர் புதின்” கவலை தெரிவித்துள்ளார்.

இறுதியான கணக்கெடுப்புக்களின்படி, ரஷ்யாவில் 18.300 பேர் தொற்றுதலுக்கு ஆளாகியிருப்பதாகவும், 150 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1.40.000 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ரஷ்யாவில், அதிகமான வைரஸ் தொற்று, தலைநகர் “Moscow / மோஸ்க்கோ” விலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதும், எனினும், ஐரோப்பாவில் மிகக்குறைந்தளவு பாதிப்பு பதியப்பட்டுள்ள நாடாகவும் ரஷ்யா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நிலைமை பற்றி கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர், நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருவதாகவும், அவசியமேற்படும் பட்சத்தில் ரஷ்ய இராணுவம் களமிறக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

மோசமான நிலையில் ரஷ்யா!

பெருநகரங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், பெருநகரங்களில் இருந்து வெற்றிடங்களுக்கு செல்பவர்களுக்கான விசேட அனுமதிகளை இலத்திரனியல் மூலமாக வழங்கும் முறையும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், இதன்படி இதுவரை சுமார் 8.00.000 இலத்திரனியல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள