யஸ்மின் சூகா, நவநீதம்பிள்ளையை உள்ளடக்கி விரைவில் தமிழர் தேசிய சபை!

You are currently viewing யஸ்மின் சூகா, நவநீதம்பிள்ளையை உள்ளடக்கி விரைவில் தமிழர் தேசிய சபை!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர்களான யஸ்மின் சூகா, நவநீதம்பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காகவும், துறைசார் ஆலோசனைகள் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொளபடுவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளோம்.

எதிர்காலத்தில் தமிழர் தீர்வு விடயங்களிலும் ஒன்றாக சேர்த்து செயற்படுவதற்காக தேசிய சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. விரைவில் தேசியசபை உருவாக்கப்படும். இந்த நடவடிக்கை தேர்தலை இலக்காக கொண்டதல்ல காலத்தின் கட்டாய தேவை என்றார்

பகிர்ந்துகொள்ள