யாழின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நெடுந்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினர்

You are currently viewing யாழின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நெடுந்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வவாசா கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்திருக்கின்றனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது.

இதேபோல் கச்சதீவிலும் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றன.

இவற்றை கண்டித்தே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பாா்வையிட்டுள்ளனர்.

அதனையடுத்து கோட்டைப் பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். அதனையடுத்தே நண்பகல் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாகவும் பிரதான போராட்டம் இடம்பெற்றது.

இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மேலதிக காவல்துறையினர் நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பதற்றமான நிலையினை காவல்துறையினர் ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

யாழின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நெடுந்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினர் 1

யாழின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நெடுந்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினர் 2

யாழின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நெடுந்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினர் 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply