நெல்லியடி வதிரியைச் சேர்ந்த 38 வயதான மயில்வாகனம் ரஞ்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிய வருகிறது.
ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட ரஞ்சன் துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
துருக்கியில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுகுள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக செல்ல வேண்டும், ஆறு,மலை,காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும்.
இந்நிலையில் குறித்த இளைஞனும் ஆட்கடத்தல் முகவரினால் துருக்கியில் இருந்து கிறீஸ் நாட்டுக்குள் நுழைய காட்டுப் பகுதி ஊடாக அழைத்து செல்லப்பட்டாத தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இளைஞர் கிறீஸ் எல்லை காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக துருக்கி காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.