அநுராதபுரத்தில் இளம் தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதிய நகர் பகுதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் ரயிலில் மோதுண்டு அவர்கள்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியில் இருந்து வந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காங்கசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 37 வயதான தாயும் 18 வயதான மகளும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.