யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது !

You are currently viewing யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது !

யாழில் ஆசிரியரை  மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு துணை போன தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்றுமுன்தினம்(22.03.2025) அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர், ஆசிரியரை மண்வெட்டி ஒன்றினால் சராமரியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைவாக தனியார் நிதி நிறுவன முகாமையாளரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் சிறீலங்கா காவற்துறையினர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதும் தாக்குதலை மேற்கொண்ட தனியார் நிதி நிறுவன முகாமையாளர் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply