வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம் இன்று (21) யாழ். செம்மணி பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் இ.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், நல்லூர் பிரதேசசபை செயலாளர் யு.ஜெலீபன், வலிகாமம் தெற்கு கமக்கார அமைப்பின் செயலாளர் ந.கஜேந்திரகுமார், செம்மணி இந்து மயான தலைவர் இ.லட்சுமிகாந்தன், இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.பிரதீபன், நல்லூர் வடக்கு சனசமூக நிலைய தலைவர் பூ.லிங்கநாதன், நாயன்மார்கட்டு பாரதி சனசமூக நிலைய தலைவர் இ.ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
அத்துடன் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.