யாழ்.கந்தர்மடம் பகுதியில் புகையிரத கடவைக்குள் நுழைந்த முதியவர் மீது புகையிரதம் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

