யாழ்ப்பாணத்தில் நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை சிறீலங்கா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாக கூறி 3,694,000 ரூபாவை தனது கணக்கிற்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் இருவரும் நேற்றுமுன்தினம்(04 ) பிற்பகல் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் நேற்று (05) பெதுருதுடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.