யாழில் எறும்புக் கடிக்கு இலக்கான பிறந்து 21 நாளேயான சிசு உயிரிழப்பு!

You are currently viewing யாழில் எறும்புக் கடிக்கு இலக்கான பிறந்து 21 நாளேயான சிசு உயிரிழப்பு!

எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற் கூறுகள் செயலிழந்து, பிறந்து 21 நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசு ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த  தம்பதிகளின் நான்காவது குழந்தையாகும்.

மேற்படி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் சிசுவுக்கு எறும்பு கடித்த நிலையில் அதனை அவர்கள் கவனிக்காமல் விட்டதன் காரணமாக,நேற்று அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணை மேற்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply