யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி!

You are currently viewing யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம்  – கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி – தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்,

அவரின் உடலில் நோய் அதிகரிக்க யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply