“யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You are currently viewing “யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றை தினம் (13-12-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

“யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் மற்றும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இக்காய்ச்சலினால் யாழ் மாவட்டத்தில் 07 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இக்காய்ச்சல் காரணமாக சிகிச்ச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நோயாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் 03 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply