யாழ்ப்பாணம் மாநகர பொம்மை வெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பொது அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.