யாழில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்!

You are currently viewing யாழில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்!

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (13) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது – 59) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மேசன் வேலைக்காக யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

இந்தநிலையில், 11.00 மணியளவில் திடீரென மயக்கமுற்றுள்ளார். இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அங்கு வந்த நோயாளர் காவு வண்டி அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் திரும்பி சென்றுள்ளது.

இதையடுத்து, அவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply