யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு!

You are currently viewing யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம்  என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில் , அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments