யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 2ஆம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு நேற்றுமுன்தினம் (26) காலை காய்ச்சல் ஏற்பட்டநிலையில் மாலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.