யாழில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி காணொளியாக பதிவு! 8 பேர் கைது!

You are currently viewing யாழில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி காணொளியாக பதிவு! 8 பேர் கைது!

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதனை காணொளியாக டிக்டொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, நெல்லியடிப் பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் 8 பேரும் கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை சிறீலங்கா காவற்துறை பிராந்திய சிறீலங்கா காவற்துறை புலனாய்வு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை நேற்றிரவு முன்னெடுத்துள்ளனர்.

நீண்ட நாட்கள் காணப்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 54 வயதுடைய குடும்பத்தலைவர் மீது கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயடைந்த குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான காணொளியை பதிவு செய்தவர்கள் முகங்களை மறைத்து டிக்டொக் (Tiktok) செயலில் காணொளியினை வெளியிட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், கூலிக்கு பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் சிறீலங்கா காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் எட்டு பேரும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply