யாழில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு!

You are currently viewing யாழில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி பகுதியை சேர்ந்த பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் சிறீலங்கா காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊடகவியலாளரும், பணிப்பாளருமான சாந்தலிங்கம் வினோதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த அன்னதான மண்டத்தை பராமரித்துவரும் பத்திரிகையாளரின் தந்தையான சாந்தலிங்கம்,  குறித்த அன்னதான மண்டபத்தை நாம் பராமரிப்பு வருகின்றோம். நீங்கள் அந்த வகையில் எமக்கு சொல்லாமல் இவ்வாறு கூட்டம் நடாத்தமுடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கூட்டம் நடந்துகொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதன் காரணமாக பதில் பிரதேச செயலாளர், “நான் பிரதேச செயலாளர். எனக்கு அதிகாரம் உண்டு.” என்று கூறி தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறியதால் பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினர் ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply