யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து நடாத்திய தாக்குதலில் அவரின் தந்தை காயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (12.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்புத்துறை – நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேட்பாளரின் வீட்டிற்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்துள்ளது.
இதனையடுத்து, வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய கும்பலை சேர்ந்தோர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
மேலும், அயல் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞனின் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.